• May 02 2024

எகிப்துக்கு பயணமான பிரதமர் மோடி: முதலாம் உலக போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி..!samugammedia

Sharmi / Jun 24th 2023, 10:43 am
image

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் தடவையாக எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை பெயரில் பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார்.

அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, இரு தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், அமெரிக்க பாராளுமன்ற கூட்டமர்விலும்  உரையாற்றினார்.

இவ்வாறாக  அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டிற்கு  2  நாள் பயணமாக அவர் புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்கு பிரதமர், எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல் சிசியையும், எகிப்து அரசின் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் எகிப்து அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

அத்துடன்  இந்த பயணத்தின் பொழுது,முதலாம்  உலகப் போரின் போது எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு உயிரிழந்த 4,000 இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடமான கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைத் தோட்டத்தையும் அவர் பார்வையிடவுள்ளார்.          

மேலும், அங்கு பிரதமர் மோடி  உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




எகிப்துக்கு பயணமான பிரதமர் மோடி: முதலாம் உலக போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி.samugammedia பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் தடவையாக எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை பெயரில் பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, இரு தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், அமெரிக்க பாராளுமன்ற கூட்டமர்விலும்  உரையாற்றினார். இவ்வாறாக  அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து நாட்டிற்கு  2  நாள் பயணமாக அவர் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பிரதமர், எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல் சிசியையும், எகிப்து அரசின் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் எகிப்து அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. அத்துடன்  இந்த பயணத்தின் பொழுது,முதலாம்  உலகப் போரின் போது எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு உயிரிழந்த 4,000 இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடமான கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைத் தோட்டத்தையும் அவர் பார்வையிடவுள்ளார்.          மேலும், அங்கு பிரதமர் மோடி  உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement