• Jul 05 2025

பொலிஸ் மற்றும் படையினரின் அதிரடி சோதனை - 300இற்கும் மேற்பட்டோர் கைது!

Chithra / Jul 5th 2025, 12:25 pm
image


நாட்டின் சில  பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று  இரவு முழுவதும் கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 

நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் செயல்முறையின் மற்றுமொரு அத்தியாயமாக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் படையினரின் அதிரடி சோதனை - 300இற்கும் மேற்பட்டோர் கைது நாட்டின் சில  பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று  இரவு முழுவதும் கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் செயல்முறையின் மற்றுமொரு அத்தியாயமாக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement