• Jan 26 2025

புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

Chithra / Jan 19th 2025, 7:32 am
image

 

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய 9000 பேரை, புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது சுமார் 75,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள தற்போதைய அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்  புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய 9000 பேரை, புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது சுமார் 75,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள், போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள தற்போதைய அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாகவே புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement