களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகச் சென்ற முச்சக்கர வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், போபுவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த முச்சக்கர வண்டியை சுமார் 4 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற பொலிஸார், நாகொட பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்தவரும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுபவருமான 'ரஜவத்த சஞ்சு' என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருட்களின் வகை மற்றும் அளவு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முச்சக்கர வண்டியை 4 கிலோமீற்றர் துரத்திச் சென்ற பொலிஸார் அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் - களுத்துறையில் பரபரப்பு களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகச் சென்ற முச்சக்கர வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், போபுவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர்.எனினும், பொலிஸாரின் கட்டளையைப் புறக்கணித்த முச்சக்கர வண்டியின் சாரதி, வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றுள்ளார்.இதனையடுத்து, குறித்த முச்சக்கர வண்டியை சுமார் 4 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற பொலிஸார், நாகொட பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த நபர், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்தவரும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுபவருமான 'ரஜவத்த சஞ்சு' என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கர வண்டியைப் பொலிஸார் சோதனையிட்டபோது, அதிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த போதைப்பொருட்களின் வகை மற்றும் அளவு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.