• Apr 30 2024

போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொருட்களை சேகரிக்கும் பொலிஸார்! SamugamMedia

Chithra / Mar 16th 2023, 9:43 am
image

Advertisement

நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், மேல் மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம், நாட்டின் 12 பொலிஸ் பிரிவுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதம் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.


எரிவாயு முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ரப்பர் தடிகள் வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

அநுராதபுரம், மட்டக்களப்பு, எல்பிட்டிய, குருநாகல், மாத்தளை, பொலன்னறுவை, தங்கல்ல, கண்டி, கந்தளாய், நுவரெலியா, புத்தளம், திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன. 


போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொருட்களை சேகரிக்கும் பொலிஸார் SamugamMedia நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், மேல் மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம், நாட்டின் 12 பொலிஸ் பிரிவுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதம் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.எரிவாயு முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ரப்பர் தடிகள் வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.அநுராதபுரம், மட்டக்களப்பு, எல்பிட்டிய, குருநாகல், மாத்தளை, பொலன்னறுவை, தங்கல்ல, கண்டி, கந்தளாய், நுவரெலியா, புத்தளம், திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement