“சிறி தலதா வழிபாட்டு” நிகழ்விற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் VIPஅல்லது VVIP என்ற பிரமுகர்களுக்கான சிறப்பு வரிசை இல்லை என்று கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.
“சிறி தலதா வழிபாட்டு” யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழிநடத்தல் தொடர்பாக இன்று பிற்பகல் (17) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மதகுருமார்களுக்கு மட்டுமே தலதா மாளிகைக்குள் நுழைய விசேட அனுமதி வழங்கப்படும் என்றும், அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரமுகர்களாக, வெளிநாட்டுத் தூதுவர்களும், விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பு, வழிபட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தலதா மாளிகை யாத்திரையின் போது 98% யாத்திரிகர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதுடன், காலை பால் உணவு பூஜைக்கு வரும் பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் யாத்திரையை மேற்கொள்ளலாம்.
இருப்பினும், அவர்கள் அனைவரும் காலை 10.30 மணிக்குள் தலதா மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தலதா வந்தனா யாத்திரைக்கு மூன்று வரிசைகள் காணப்படுவதுடன், வௌியேறுவதற்கு இரண்டு வரிசைகள் காணப்படும்.
வரிசையில் நிற்கும் யாத்திரிகர்கள் வீடியோவில் பதிவு செய்யப்படுவதால், “யாரும் இடையில் நுழைய முடியாது” என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க சுட்டிக்காட்டினார்.
தலதா வழிபாட்டிற்காக VIP அல்லது VVIP வரிசை தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு “சிறி தலதா வழிபாட்டு” நிகழ்விற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் VIPஅல்லது VVIP என்ற பிரமுகர்களுக்கான சிறப்பு வரிசை இல்லை என்று கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.“சிறி தலதா வழிபாட்டு” யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழிநடத்தல் தொடர்பாக இன்று பிற்பகல் (17) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மதகுருமார்களுக்கு மட்டுமே தலதா மாளிகைக்குள் நுழைய விசேட அனுமதி வழங்கப்படும் என்றும், அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க கூறியுள்ளார்.இதற்கிடையில், பிரமுகர்களாக, வெளிநாட்டுத் தூதுவர்களும், விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பு, வழிபட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.தலதா மாளிகை யாத்திரையின் போது 98% யாத்திரிகர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதுடன், காலை பால் உணவு பூஜைக்கு வரும் பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் யாத்திரையை மேற்கொள்ளலாம்.இருப்பினும், அவர்கள் அனைவரும் காலை 10.30 மணிக்குள் தலதா மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.தலதா வந்தனா யாத்திரைக்கு மூன்று வரிசைகள் காணப்படுவதுடன், வௌியேறுவதற்கு இரண்டு வரிசைகள் காணப்படும்.வரிசையில் நிற்கும் யாத்திரிகர்கள் வீடியோவில் பதிவு செய்யப்படுவதால், “யாரும் இடையில் நுழைய முடியாது” என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்க சுட்டிக்காட்டினார்.