• May 19 2024

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்- பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சி! samugammedia

Tamil nila / Sep 6th 2023, 8:57 am
image

Advertisement

இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளை ஆய்வு செய்த போது அதில் 1406 கிராம் கஞ்சா மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 14,085,000 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் கொழும்பு தபாலகததில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ளவர்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்களாக பொதிகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் அவற்றினை ஆய்வு செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறிப்பாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 86 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை தபால் மதிப்பீட்டு அலுவலகத்தின் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு வந்த மர்ம பொதிகள்- பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சி samugammedia இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளை ஆய்வு செய்த போது அதில் 1406 கிராம் கஞ்சா மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 14,085,000 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.அத்துடன் சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் கொழும்பு தபாலகததில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ளவர்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.நீண்ட நாட்களாக பொதிகள் அகற்றப்படாததால் அதிகாரிகள் அவற்றினை ஆய்வு செய்தனர்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.குறிப்பாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 86 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை தபால் மதிப்பீட்டு அலுவலகத்தின் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement