• Jan 13 2025

திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் தகவல் கோரும் பொலிசார்

Chithra / Dec 30th 2024, 9:40 am
image

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் அந்தத் திணைக்களம் வழங்கியுள்ளது.

அதன்படி 0112 337 219 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு குறித்த தகவல்களை வழங்க முடியும்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் அவரின் கணக்கில் 27 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் நபரொருவரிடம் 40 இலட்சம் ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார். 

திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் தகவல் கோரும் பொலிசார்  வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் அந்தத் திணைக்களம் வழங்கியுள்ளது.அதன்படி 0112 337 219 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு குறித்த தகவல்களை வழங்க முடியும்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் அவரின் கணக்கில் 27 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.சந்தேகநபர் நபரொருவரிடம் 40 இலட்சம் ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement