• Nov 23 2024

தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடக மீறல்களை கண்காணிக்கும் பொலிஸ்..! மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Sep 5th 2024, 1:21 pm
image

 

தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களிற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் 21ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரச்சாரங்களின் பிரதான தளமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன.

இந்த சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் குறித்த முறைப்பாடுகளை எவ்வாறு கையாள்வது   என்பது குறித்த வழிகாட்டுதல்களை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் அவற்றை நீக்குவது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம்,சிஐடியின் கணிணி குற்றப்பிரிவுடன்  ஒருங்கிணைப்பது ஆகியவை குறித்த தெளிவான விளக்கங்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதிவுகளை அகற்றுவது குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது உட்பட தேர்தல் காலத்தில் சமூக ஊடக விவகாரத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அனைத்து பொலிஸ்நிலையங்களிற்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடக மீறல்களை கண்காணிக்கும் பொலிஸ். மக்களுக்கு எச்சரிக்கை  தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களிற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி தேர்தல் 21ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரச்சாரங்களின் பிரதான தளமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன.இந்த சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் குறித்த முறைப்பாடுகளை எவ்வாறு கையாள்வது   என்பது குறித்த வழிகாட்டுதல்களை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் அவற்றை நீக்குவது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம்,சிஐடியின் கணிணி குற்றப்பிரிவுடன்  ஒருங்கிணைப்பது ஆகியவை குறித்த தெளிவான விளக்கங்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பதிவுகளை அகற்றுவது குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது உட்பட தேர்தல் காலத்தில் சமூக ஊடக விவகாரத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அனைத்து பொலிஸ்நிலையங்களிற்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement