• Jan 16 2025

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் - இந்நிலைமை மாற வேண்டும்..! வலியுறுத்தும் ஜோசப் ஸ்டாலின்

Chithra / Jan 15th 2025, 10:41 am
image

 

அரசியல் தலையீடுகள் இன்றி ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரே பாடசாலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்கள் சிலருக்கு இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட போதிலும், சிலர் அவர்களுக்கு இடமாற்றம் பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்ற முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு சில ஆசிரியர்களது இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும் இந்த நிலைமை மாற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் குறித்த பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், உரிய பதிலீடுகள் இல்லை என்ற அடிப்படையில் சில ஆசிரியர்கள் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் சேவையாற்ற முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தூரப் பிரதேசங்களில் சேவையாற்றாத 40 முதல் 50 வயதுடைய ஆசிரியர்களை, தூரப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார். 

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் - இந்நிலைமை மாற வேண்டும். வலியுறுத்தும் ஜோசப் ஸ்டாலின்  அரசியல் தலையீடுகள் இன்றி ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரே பாடசாலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்கள் சிலருக்கு இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட போதிலும், சிலர் அவர்களுக்கு இடமாற்றம் பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சில ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்ற முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு சில ஆசிரியர்களது இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும் இந்த நிலைமை மாற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் குறித்த பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், உரிய பதிலீடுகள் இல்லை என்ற அடிப்படையில் சில ஆசிரியர்கள் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் சேவையாற்ற முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.தூரப் பிரதேசங்களில் சேவையாற்றாத 40 முதல் 50 வயதுடைய ஆசிரியர்களை, தூரப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement