• May 17 2024

தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசியல் தலையீடு! - முறைப்பாடு மகஜர் கையளிப்பு

Chithra / Jan 11th 2023, 11:29 am
image

Advertisement

தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் முறைப்பாடும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவரான சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்கு வருகை தந்த பின்னர் எமது செய்தி பிரிவிற்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

சந்திரகுமார் சுதன் என்பவர் சங்கத்தின் கணக்காய்வுகள் பிழை என ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு என்பது கடற்தொழில் அங்கத்தவர்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதாக சிவநேசபிள்ளை சிவச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரகுமார் சுதன் என்பவர் அரசியல் சார்ந்து தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நாங்கள் பணத்தை கொடுத்துளோம். எங்களுடைய முதலீடு கடற்றொழில் சங்கத்திடமே உள்ளது. சங்கத்தினுடைய வருமதியாளர் பட்டியலில் இருக்கின்றவர்களிடம் எங்களுடைய ஒவ்வொரு ரூபாயும் உள்ளது.

இவர் முதலில் தன்னுடைய பணத்தை கட்டிய பின்னர் ஏனையவர்களுக்கு கருத்தை கூற முற்பட்டிருக்கலாம்.

உண்மையிலயே எமது கடற்றொழிலாளர் சங்கத்தின் பின்னடைவிற்கு காரணம் இவ்வாறானவர்களை நாங்கள் நிர்வாகத்திற்குள் கொண்டு வருவது எமது சமூகத்தினையும், எங்களுடைய மக்களையும்  இழிவாக  

மையப்படுத்தி கீழ்த்தனமான  கருத்துக்களை ஊடகத்திற்கு வழங்கியுள்ளார்.

சமூகம் ஒரு பன்றி கூட்டம், ஒரு பன்றி ஓடியது என்றால் அந்த பன்றி கதையை கூறியதற்கான அர்த்தத்தை நாங்கள் விளங்கி கொண்டோம்.

அனைவரும் ஒருவருக்கு பின்னால் ஓடுகின்றோம், அவர் ஏன் ஓடுகின்றார் என்று தெரியாமல் ஓடுவதாக கூறியிருந்தார் அவ்வாறன்று.

நாங்கள் சுயமாக சிந்தித்து இன்று கடிதத்தை எழுதி 90 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கையெழுத்திட்டு கூட்டுறவு உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளோம். எங்களுடைய முறைப்பாட்டை அவர் ஏற்றுள்ளார்.

அரசியல் தலையீட்டினையும் அது தொடர்பான விடயங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.- என்றார்.

தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசியல் தலையீடு - முறைப்பாடு மகஜர் கையளிப்பு தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் முறைப்பாடும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவரான சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்துள்ளார்.நேற்று மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்கு வருகை தந்த பின்னர் எமது செய்தி பிரிவிற்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.சந்திரகுமார் சுதன் என்பவர் சங்கத்தின் கணக்காய்வுகள் பிழை என ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த குற்றச்சாட்டு என்பது கடற்தொழில் அங்கத்தவர்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதாக சிவநேசபிள்ளை சிவச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.சந்திரகுமார் சுதன் என்பவர் அரசியல் சார்ந்து தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.நாங்கள் பணத்தை கொடுத்துளோம். எங்களுடைய முதலீடு கடற்றொழில் சங்கத்திடமே உள்ளது. சங்கத்தினுடைய வருமதியாளர் பட்டியலில் இருக்கின்றவர்களிடம் எங்களுடைய ஒவ்வொரு ரூபாயும் உள்ளது.இவர் முதலில் தன்னுடைய பணத்தை கட்டிய பின்னர் ஏனையவர்களுக்கு கருத்தை கூற முற்பட்டிருக்கலாம்.உண்மையிலயே எமது கடற்றொழிலாளர் சங்கத்தின் பின்னடைவிற்கு காரணம் இவ்வாறானவர்களை நாங்கள் நிர்வாகத்திற்குள் கொண்டு வருவது எமது சமூகத்தினையும், எங்களுடைய மக்களையும்  இழிவாக  மையப்படுத்தி கீழ்த்தனமான  கருத்துக்களை ஊடகத்திற்கு வழங்கியுள்ளார்.சமூகம் ஒரு பன்றி கூட்டம், ஒரு பன்றி ஓடியது என்றால் அந்த பன்றி கதையை கூறியதற்கான அர்த்தத்தை நாங்கள் விளங்கி கொண்டோம்.அனைவரும் ஒருவருக்கு பின்னால் ஓடுகின்றோம், அவர் ஏன் ஓடுகின்றார் என்று தெரியாமல் ஓடுவதாக கூறியிருந்தார் அவ்வாறன்று.நாங்கள் சுயமாக சிந்தித்து இன்று கடிதத்தை எழுதி 90 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கையெழுத்திட்டு கூட்டுறவு உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளோம். எங்களுடைய முறைப்பாட்டை அவர் ஏற்றுள்ளார்.அரசியல் தலையீட்டினையும் அது தொடர்பான விடயங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement