• Nov 28 2024

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியம்; தீவிர முயற்சியில் பிரதமர் ?

Chithra / Aug 1st 2024, 11:22 am
image

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

 தேர்தலில் ஜனாதிபதிக்கான பொதுத்தளத்தை ஏற்படுத்துவதற்காக  அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என பசில் ராஜபக்ச பிடிவாதமாகயிருந்ததால் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 

ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நிறுத்துவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இருவரையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் தொடர்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்தவிற்கும் ரணிலுக்கும் இடையில் அரசியல் ஐக்கியம்; தீவிர முயற்சியில் பிரதமர்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.இரண்டு தலைவர்களிற்கும் நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. தேர்தலில் ஜனாதிபதிக்கான பொதுத்தளத்தை ஏற்படுத்துவதற்காக  அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என பசில் ராஜபக்ச பிடிவாதமாகயிருந்ததால் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நிறுத்துவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.தேர்தல் கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தார்.இருவரையும் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை பிரதமர் தொடர்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

Advertisement