• May 18 2024

சவப்பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த அரசியல்வாதி! samugammedia

Tamil nila / Aug 10th 2023, 3:09 pm
image

Advertisement

அரசியல் குதிப்பதற்கு பலருக்கும் ஆசையிருக்கும், ஆட்சியில் இருப்பவர்களும், எதிரணியில் இருப்பவர்களும் வாக்கு வித்தியாசத்தில் தங்களுக்கு முன்பாக இருப்பவர் மரணிக்கவேண்டும். அப்போதுதான் தங்களால் எம்.பியாக முடியுமென நினைப்பவர்களும் உள்ளனர்.

எனினும், மரணித்ததாக கூறப்படும் அரசியல் வாதியொருவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டெழுந்த சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மகேஷ் பாகேல் (65), முன்னாள் ஆக்ரா பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உடற்பாகங்கள் செயழிந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது இறுதி சடங்கிற்காக குடும்பத்தினர் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​​​பாகேல் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடலில் அசைவு இருந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந் நிலையில் உறவினர்கள் அவரை ஆக்ரா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்தியர்கள் பாகேலை பரிசோதனைக்குட்படுத்தி அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சவப்பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த அரசியல்வாதி samugammedia அரசியல் குதிப்பதற்கு பலருக்கும் ஆசையிருக்கும், ஆட்சியில் இருப்பவர்களும், எதிரணியில் இருப்பவர்களும் வாக்கு வித்தியாசத்தில் தங்களுக்கு முன்பாக இருப்பவர் மரணிக்கவேண்டும். அப்போதுதான் தங்களால் எம்.பியாக முடியுமென நினைப்பவர்களும் உள்ளனர்.எனினும், மரணித்ததாக கூறப்படும் அரசியல் வாதியொருவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டெழுந்த சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.மகேஷ் பாகேல் (65), முன்னாள் ஆக்ரா பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உடற்பாகங்கள் செயழிந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.இதனையடுத்து அவரது இறுதி சடங்கிற்காக குடும்பத்தினர் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​​​பாகேல் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடலில் அசைவு இருந்ததை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந் நிலையில் உறவினர்கள் அவரை ஆக்ரா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்தியர்கள் பாகேலை பரிசோதனைக்குட்படுத்தி அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement