• May 19 2024

முல்லை நீதிபதியின் விவகாரத்தை அரசியலாக்கி விளம்பரம்...! கொழும்பில் சாகும் வரை போராட்டம் நடாத்த தயாரா? புஸ்பதேவா கேள்வி samugammedia

Sharmi / Oct 9th 2023, 12:05 pm
image

Advertisement

முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜாவின் விடயத்தை சில தரப்பினர் அரசியலாக்கி விளம்பரம் செய்கிறார்கள் என பராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வன்னி பிரதேசத்துக்கான இணைப்பு செயலாளர் புஷ்பதேவா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று(09) இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி விவகாரத்தை அரசியல் செய்தி விளம்பரம் தேடுகிறார்கள்.  நீதிபதி ஐயா நீதிசேவைக்கு கடிதம் ஒன்று அனுப்பி  உள்ளார். குறித்த கடிதம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்வதற்கு முன்னரே சில முகநூல் போராளிகள், அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியலை ஆரம்பித்து விட்டார்கள்.

நீதிபதி அவர்கள் குறித்த கடிதத்தில் வெறுமனே தன் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எனவே மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக எழுதியுள்ளார்.  அதின் விபரம் விளக்கம் எங்கும் எந்த ஊடகத்திடமும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. அதை வைத்து இங்கு பல கதை எழுதுகிறவர்கள் எழுதுகிறார்கள்.

நீதிபதி ஐயா விவகாரம் உண்மை கண்டறிய என்று ஒரு குழு விசராணை செய்கிறது நடவடிக்கை எடுக்கபடும் என்று நீதி சேவை ஆனைக்குழு அறிவித்துள்ளது.எனினும் நீதிமன்ற நீதிச் சேவை விடயம் என்பதால் நான் நிறைய விமர்சனம் வைக்க முடியாது இதன் உண்மை தன்மை தெரியாமல். 

நீதிபதி விவகாரத்தை வைத்து எமது வடக்கு நீதிபதிகளையும் சட்டதரணிகளையும் குறை சொல்லும் அளவுக்கு இந்த அரசியல்வாதிகள் முற்படுவது கண்டிக்கத்தக்கது.  அது ஒருபக்கம் இருக்க. 

இந்த கடையடைப்பு போராட்டம் என்று எனக்கு தெரிந்த வரையில் கடந்த 30 வருடமாக செய்கிறார்கள். இதனால் என்ன பயன் கிடைத்தது அரசியல் இலாபமும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலைவரும் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டி கொள்வதற்கு மட்டும் தானே. 

அந்த காலத்தில் தமிழ் ஆயுத குழுவால் கடையடைப்பு செய்ய கோரி ஹர்த்தால் என்று அறிவிக்கப்பட்டால் அக்கடைகளை பூட்ட கூடாது என்று கடைகளை உடைத்தும் மிரட்டல் விடுத்தும் திறக்க சொன்ன  ரெலோ, புளொட், EPRLF இப்பொழுது 2009 பிறகு கடையடைப்பை செய்ய கோருகின்றனர் என்பது அதன் வியப்பாக உள்ளது.

இதே போல் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் அறிக்கை விடுவதும் இல்லை, அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரை தமிழர் விடுதலை என்கிறவர்கள் தமிழர்களை அழித்து தான் செயற்பட்டார்கள்  என்பதை தெளிவுபடுத்துகிறேன்

ஹர்த்தால் என்று இப்பொழுது கடை உரிமையாளர் தொடக்கம் வேலையாட்கள் வரைக்கும் ஒரு விடுமுறை கிடைத்துள்ளது. அதை கொண்டாடுவோம் என்கிற மன நிலையில் தான் கதவடைப்பை செய்கிறார்களே தவிர இங்கு உணர்வுபூர்வமாக பூட்டுவது கிடையாது

இன்றும்  வடக்கில் கடையடைப்பை செய்தால் தமிழர்களுக்கு தானே நஷ்டம் ஏற்படுமே தவிர மாற்றானுக்கு இல்லை. ஆக நாட்கூலி வேலை செய்பவர்களையும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலையை யார் பார்ப்பது..?

வடக்கில் ஹர்த்தால் செய்தால் வடக்கு தானே முடங்கும் தெற்கில் என்ன ஆகும் . ஆக தமிழர்களே தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள் என்பதுவே உண்மை.

இந்த அரசியல்வாதிகள், போராளிகள் முடிந்தால் கொழும்புக்கு போய் அங்கு ஒரு முடக்கத்தை செய்து அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் பார்ப்போம்.. வெறுமனே பாராளுமன்றில் பாதுகாப்புடன் சத்தமாக பேசி , பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறது பெருமை இல்லை,  உங்கள் ஆதரவாளர்களை எல்லாம் கொழும்பிற்கு அழைத்து சென்று  முடக்கம் செய்ய முடியுமா. நீங்கள் மக்களுக்காக தானே அரசியல் செய்கிறீர்கள்? சாகும் வரை போராட்டம் செய்ய போகிறோம் என்று கொழும்பில் நடாத்துங்கள் பார்ப்போம்  அதே நேரம் உங்கள் ஆதரவாளர்களை மாத்திரம் அமர்த்தாமல் தலைவர்கள் அமரமுடியுமா..?

மக்களும் எதோ என்பதுபோல் பழக்கபட்டு விட்டார்கள் அவ்வளவும் தான். இதுவரை காலமும் கடையடைப்பை செய்து என்ன பலன் கிடைத்தது என்று சொல்ல யாரும் இல்லை அதே போல் தான் இம்முறையும். 

இதேவேளை ஊடகவியளாருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மறைமுகமாக ஆதரவு கொடுக்காதீர்கள் அதாவது சில வியாபார ஸ்தலங்கள் திறந்திருந்தால் குறித்த தளத்தை புகைப்படம் எடுத்து நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதால் சில போலி முகநூல் விமர்சகர்களும் சில கேவலமான செயற்பட்டார்களும் தகாத வார்த்தையால்  விமர்சனம் செய்வார்கள். அதனால் பல அவமானங்களை சந்தித்து அவர்களும் தமது வியாபார ஸ்தலங்கள் பூட்டுகிறார்கள் எனவே அன்பான ஊடக நண்பர்களே இவ்வாறான செயல்களை தவிர்ப்பதும் நல்லது என நினைக்கின்றேன்

மேலும் போலி தேசியம் பேசும் அரசியல்வாதிகளே முடிந்தால் கொழுபில் கடையடைப்பை செய்யுங்கள், இல்லை மக்களுக்காக விடுதலை என்று காலத்துக்கு காலம் நிறமாறி பேசுகிறதை விடுத்து உண்ணாவிரதம் இருங்கள் முடியுமா..? அதை செய்யமாட்டீர்கள் ஆக ஏமாறும் மக்கள் இருக்குமட்டும் ஏமாற்றி கொண்டே தான் இருக்க போகிறீர்கள் இந்நிலை நீண்ட நாட்களுக்கு இல்லை. உங்கள் போன்ற போலி பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே பகிரங்கமாக ஊடக சந்திப்பை செய்கிறேன்.

இதே போல் உள்ள ஏனைய அரசியல்வாதிகள் முக்கியமாக அரச தரப்பு அரசியல்வாதிகள் தேசியகட்சி சார்ந்தவர்கள் நீங்களும் முக =நூலில் விளம்பரத்தை மட்டும் தேடாமல் மக்களுக்கு உண்மையை சொல்லிவிளங்கபடுத்துங்கள். உண்மையை சொன்னால் எதிர்புவரும் அஞ்சி ஓடி மறையாதீர்பள்  அதே போல் உண்மையை அறிந்தால் ஆதரவு தரக்கூடிய மக்களும் இருப்பார்கள். 

EPDP, UNP, பொதுஜனபெரமுனவை சேர்ந்த பிரமுகர்கள்  எல்லோரும் சத்தம் இல்லாமல் இருக்கிறது ஏன் ?? உண்மை சொல்ல பயமா ஆக நீங்ளும் மக்களுக்காக இல்லையா உங்க அரசியலுக்காக மாத்திரமா உள்ளீர்கள்

உண்மையில் போலி தேசியம் பேசி மக்களை உசுப்பேற்றும் கூட்டத்தினர் சீசனுக்கு சீசன் ஒவ்வொரு விடயத்தை முன் நிறுத்தி மக்களை குழப்பிவிட்டு தங்கள் அரசியலை செய்கிறார்கள் உதாரணமாக நீதிபதி ஐயாவின் பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன் ஆசாத் மெளலான பிரச்சினை அது முடிய முன் இப்பொழுது நீதிபதி பிரச்சினை இப்படியே இவர்கள் எங்கள் மக்களை ஏமாற்றி தமது அரசியலை செய்துகொண்டே போகிறார்கள் எனவே மக்கள் இனியும் இவர்களை நம்பாமல் இவர்களின் போலி முகத்திரைகளை கிழிக்க முன்வரவேண்டும் என்றும் இந்த ஊடக சந்திப்பின் ஊடாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

முல்லை நீதிபதியின் விவகாரத்தை அரசியலாக்கி விளம்பரம். கொழும்பில் சாகும் வரை போராட்டம் நடாத்த தயாரா புஸ்பதேவா கேள்வி samugammedia முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜாவின் விடயத்தை சில தரப்பினர் அரசியலாக்கி விளம்பரம் செய்கிறார்கள் என பராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வன்னி பிரதேசத்துக்கான இணைப்பு செயலாளர் புஷ்பதேவா தெரிவித்துள்ளார்.வவுனியா ஊடக அமையத்தில் இன்று(09) இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நீதிபதி விவகாரத்தை அரசியல் செய்தி விளம்பரம் தேடுகிறார்கள்.  நீதிபதி ஐயா நீதிசேவைக்கு கடிதம் ஒன்று அனுப்பி  உள்ளார். குறித்த கடிதம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்வதற்கு முன்னரே சில முகநூல் போராளிகள், அரசியல்வாதிகள் அதை வைத்து அரசியலை ஆரம்பித்து விட்டார்கள்.நீதிபதி அவர்கள் குறித்த கடிதத்தில் வெறுமனே தன் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எனவே மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக எழுதியுள்ளார்.  அதின் விபரம் விளக்கம் எங்கும் எந்த ஊடகத்திடமும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. அதை வைத்து இங்கு பல கதை எழுதுகிறவர்கள் எழுதுகிறார்கள். நீதிபதி ஐயா விவகாரம் உண்மை கண்டறிய என்று ஒரு குழு விசராணை செய்கிறது நடவடிக்கை எடுக்கபடும் என்று நீதி சேவை ஆனைக்குழு அறிவித்துள்ளது.எனினும் நீதிமன்ற நீதிச் சேவை விடயம் என்பதால் நான் நிறைய விமர்சனம் வைக்க முடியாது இதன் உண்மை தன்மை தெரியாமல்.  நீதிபதி விவகாரத்தை வைத்து எமது வடக்கு நீதிபதிகளையும் சட்டதரணிகளையும் குறை சொல்லும் அளவுக்கு இந்த அரசியல்வாதிகள் முற்படுவது கண்டிக்கத்தக்கது.  அது ஒருபக்கம் இருக்க. இந்த கடையடைப்பு போராட்டம் என்று எனக்கு தெரிந்த வரையில் கடந்த 30 வருடமாக செய்கிறார்கள். இதனால் என்ன பயன் கிடைத்தது அரசியல் இலாபமும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலைவரும் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டி கொள்வதற்கு மட்டும் தானே. அந்த காலத்தில் தமிழ் ஆயுத குழுவால் கடையடைப்பு செய்ய கோரி ஹர்த்தால் என்று அறிவிக்கப்பட்டால் அக்கடைகளை பூட்ட கூடாது என்று கடைகளை உடைத்தும் மிரட்டல் விடுத்தும் திறக்க சொன்ன  ரெலோ, புளொட், EPRLF இப்பொழுது 2009 பிறகு கடையடைப்பை செய்ய கோருகின்றனர் என்பது அதன் வியப்பாக உள்ளது.இதே போல் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் அறிக்கை விடுவதும் இல்லை, அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரை தமிழர் விடுதலை என்கிறவர்கள் தமிழர்களை அழித்து தான் செயற்பட்டார்கள்  என்பதை தெளிவுபடுத்துகிறேன்ஹர்த்தால் என்று இப்பொழுது கடை உரிமையாளர் தொடக்கம் வேலையாட்கள் வரைக்கும் ஒரு விடுமுறை கிடைத்துள்ளது. அதை கொண்டாடுவோம் என்கிற மன நிலையில் தான் கதவடைப்பை செய்கிறார்களே தவிர இங்கு உணர்வுபூர்வமாக பூட்டுவது கிடையாதுஇன்றும்  வடக்கில் கடையடைப்பை செய்தால் தமிழர்களுக்கு தானே நஷ்டம் ஏற்படுமே தவிர மாற்றானுக்கு இல்லை. ஆக நாட்கூலி வேலை செய்பவர்களையும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலையை யார் பார்ப்பது.வடக்கில் ஹர்த்தால் செய்தால் வடக்கு தானே முடங்கும் தெற்கில் என்ன ஆகும் . ஆக தமிழர்களே தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள் என்பதுவே உண்மை.இந்த அரசியல்வாதிகள், போராளிகள் முடிந்தால் கொழும்புக்கு போய் அங்கு ஒரு முடக்கத்தை செய்து அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் பார்ப்போம். வெறுமனே பாராளுமன்றில் பாதுகாப்புடன் சத்தமாக பேசி , பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறது பெருமை இல்லை,  உங்கள் ஆதரவாளர்களை எல்லாம் கொழும்பிற்கு அழைத்து சென்று  முடக்கம் செய்ய முடியுமா. நீங்கள் மக்களுக்காக தானே அரசியல் செய்கிறீர்கள் சாகும் வரை போராட்டம் செய்ய போகிறோம் என்று கொழும்பில் நடாத்துங்கள் பார்ப்போம்  அதே நேரம் உங்கள் ஆதரவாளர்களை மாத்திரம் அமர்த்தாமல் தலைவர்கள் அமரமுடியுமா.மக்களும் எதோ என்பதுபோல் பழக்கபட்டு விட்டார்கள் அவ்வளவும் தான். இதுவரை காலமும் கடையடைப்பை செய்து என்ன பலன் கிடைத்தது என்று சொல்ல யாரும் இல்லை அதே போல் தான் இம்முறையும். இதேவேளை ஊடகவியளாருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மறைமுகமாக ஆதரவு கொடுக்காதீர்கள் அதாவது சில வியாபார ஸ்தலங்கள் திறந்திருந்தால் குறித்த தளத்தை புகைப்படம் எடுத்து நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதால் சில போலி முகநூல் விமர்சகர்களும் சில கேவலமான செயற்பட்டார்களும் தகாத வார்த்தையால்  விமர்சனம் செய்வார்கள். அதனால் பல அவமானங்களை சந்தித்து அவர்களும் தமது வியாபார ஸ்தலங்கள் பூட்டுகிறார்கள் எனவே அன்பான ஊடக நண்பர்களே இவ்வாறான செயல்களை தவிர்ப்பதும் நல்லது என நினைக்கின்றேன்மேலும் போலி தேசியம் பேசும் அரசியல்வாதிகளே முடிந்தால் கொழுபில் கடையடைப்பை செய்யுங்கள், இல்லை மக்களுக்காக விடுதலை என்று காலத்துக்கு காலம் நிறமாறி பேசுகிறதை விடுத்து உண்ணாவிரதம் இருங்கள் முடியுமா. அதை செய்யமாட்டீர்கள் ஆக ஏமாறும் மக்கள் இருக்குமட்டும் ஏமாற்றி கொண்டே தான் இருக்க போகிறீர்கள் இந்நிலை நீண்ட நாட்களுக்கு இல்லை. உங்கள் போன்ற போலி பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே பகிரங்கமாக ஊடக சந்திப்பை செய்கிறேன்.இதே போல் உள்ள ஏனைய அரசியல்வாதிகள் முக்கியமாக அரச தரப்பு அரசியல்வாதிகள் தேசியகட்சி சார்ந்தவர்கள் நீங்களும் முக =நூலில் விளம்பரத்தை மட்டும் தேடாமல் மக்களுக்கு உண்மையை சொல்லிவிளங்கபடுத்துங்கள். உண்மையை சொன்னால் எதிர்புவரும் அஞ்சி ஓடி மறையாதீர்பள்  அதே போல் உண்மையை அறிந்தால் ஆதரவு தரக்கூடிய மக்களும் இருப்பார்கள். EPDP, UNP, பொதுஜனபெரமுனவை சேர்ந்த பிரமுகர்கள்  எல்லோரும் சத்தம் இல்லாமல் இருக்கிறது ஏன் உண்மை சொல்ல பயமா ஆக நீங்ளும் மக்களுக்காக இல்லையா உங்க அரசியலுக்காக மாத்திரமா உள்ளீர்கள்உண்மையில் போலி தேசியம் பேசி மக்களை உசுப்பேற்றும் கூட்டத்தினர் சீசனுக்கு சீசன் ஒவ்வொரு விடயத்தை முன் நிறுத்தி மக்களை குழப்பிவிட்டு தங்கள் அரசியலை செய்கிறார்கள் உதாரணமாக நீதிபதி ஐயாவின் பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன் ஆசாத் மெளலான பிரச்சினை அது முடிய முன் இப்பொழுது நீதிபதி பிரச்சினை இப்படியே இவர்கள் எங்கள் மக்களை ஏமாற்றி தமது அரசியலை செய்துகொண்டே போகிறார்கள் எனவே மக்கள் இனியும் இவர்களை நம்பாமல் இவர்களின் போலி முகத்திரைகளை கிழிக்க முன்வரவேண்டும் என்றும் இந்த ஊடக சந்திப்பின் ஊடாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement