• May 05 2025

யாழில் 517 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல்; பாதுகாப்பு உட்பட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Chithra / May 4th 2025, 11:26 am
image



எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், தயாரிக்கப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ் மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றையதினம்(04) கள ஆய்வை மேற்கொண்டனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார். 

இக் கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலநோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர். 

இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர். தீவு பகுதிக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தரகை மற்றும் வடதாரகை பயணிகள் கப்பல் மூலம் அனுப்புவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரா சசீலன் வாக்கெண்ணும் முறைமை பற்றி தெரிவித்தார்.



யாழில் 517 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல்; பாதுகாப்பு உட்பட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், தயாரிக்கப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ் மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றையதினம்(04) கள ஆய்வை மேற்கொண்டனர்.இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார். இக் கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலநோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர். இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர். தீவு பகுதிக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் கடற்படையினரின் உதவியுடன் நெடுந்தரகை மற்றும் வடதாரகை பயணிகள் கப்பல் மூலம் அனுப்புவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரா சசீலன் வாக்கெண்ணும் முறைமை பற்றி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement