• Nov 22 2024

யாழில் சோபையிழந்த பொங்கல் வியாபாரம்...! வீட்டுக்குள் முடங்கிய மக்கள்...! வியாபாரிகள் கவலை...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 11:21 am
image

எதிர்வரும் திங்கள் கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்  இம்முறை பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பொங்கல் பானை வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தி விற்பனையாளர்கள், வெடி விற்பனையாளர்கள் இவ்வாறான நிலையை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகிறது. 

இது தொடர்பாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் வற் வரியும் அதிகரித்துள்ளது. இதனால் நாமும் விற்பனைப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளோம்.

குறிப்பாக ஒரு கிலோ அரிசி வேகவைக்கும் மண்பானை  ஒன்றின் விலை கடந்த 03 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் 500 ரூபாவாக இருந்தது. இப்போது 800 ரூபாவாக இருக்கின்றது. 

அதே போன்று அலுமினிய பானைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  அலுமினிய பானைகள் 800 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனையாகின்றது. 

அத்துடன் பழவகைகள்,வெடிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.




யாழில் சோபையிழந்த பொங்கல் வியாபாரம். வீட்டுக்குள் முடங்கிய மக்கள். வியாபாரிகள் கவலை.samugammedia எதிர்வரும் திங்கள் கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்  இம்முறை பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, பொங்கல் பானை வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தி விற்பனையாளர்கள், வெடி விற்பனையாளர்கள் இவ்வாறான நிலையை எதிர்கொள்கின்றனர்.அதேவேளை யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகிறது. இது தொடர்பாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் வற் வரியும் அதிகரித்துள்ளது. இதனால் நாமும் விற்பனைப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளோம்.குறிப்பாக ஒரு கிலோ அரிசி வேகவைக்கும் மண்பானை  ஒன்றின் விலை கடந்த 03 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் 500 ரூபாவாக இருந்தது. இப்போது 800 ரூபாவாக இருக்கின்றது. அதே போன்று அலுமினிய பானைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக  அலுமினிய பானைகள் 800 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனையாகின்றது. அத்துடன் பழவகைகள்,வெடிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement