• Sep 21 2024

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு! samugammedia

Tamil nila / Jun 28th 2023, 6:57 pm
image

Advertisement

பருத்தித்துறை மெதடித்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலை அதிபர் திருமதி பாலராணி சிறிதரன் தலைமை இடம் பெற்ற இந்நிகழ்வில் தபால் தபால் மா அதிபர் றுவான்  சரத்குமார கலந்து கொண்டு தபால் முத்திரை தலையை வெளியிட்டு வைத்தார். 


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆ.சிறி, சிறப்பு விருந்தினர்களாக யாழ் மறை மாவட்ட ஆயர், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.சத்தியபாலன், வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஹாட்லிக் கல்லூரி அதிபர்.திரு.கலைச்செல்வன் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மெதடிஸ்த பெண்கள் உயர்தர  பாடசாலையின் அனைத்துலக நாடுகளின் கிளை தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி  பழைய மாணவிகள், கல்லூரி அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.


இதே வேளை கல்லூரியின் மாணவிகளால் 21 வீணைகள் கொண்டு இசை நிகழ்சியும் நடாத்தப்பட்டது.


இது இலங்கையில் இரண்டாவது அதி கூடிய வீணை இசை கலைஞர்களின் நிகழ்சி என சொல்லப்படுகிறது. கொழும்பு தமிழ் சங்கத்தினரால் சில வருடங்களுக்கு முன்னர் 76 வீணைகளுடன் இசை நிகழ்சி நடாத்தப்பட்டுள்ளதாகவும் அது இலங்கையில் முதலாவது சாதனை எனவும் இன்று மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் 21 வீணை இசை கச்சேரி நடாத்தப்பட்டது வட மாகாணத்தில் சாதனையாகும்.


பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு samugammedia பருத்தித்துறை மெதடித்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.பாடசாலை அதிபர் திருமதி பாலராணி சிறிதரன் தலைமை இடம் பெற்ற இந்நிகழ்வில் தபால் தபால் மா அதிபர் றுவான்  சரத்குமார கலந்து கொண்டு தபால் முத்திரை தலையை வெளியிட்டு வைத்தார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆ.சிறி, சிறப்பு விருந்தினர்களாக யாழ் மறை மாவட்ட ஆயர், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.சத்தியபாலன், வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஹாட்லிக் கல்லூரி அதிபர்.திரு.கலைச்செல்வன் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மெதடிஸ்த பெண்கள் உயர்தர  பாடசாலையின் அனைத்துலக நாடுகளின் கிளை தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி  பழைய மாணவிகள், கல்லூரி அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதே வேளை கல்லூரியின் மாணவிகளால் 21 வீணைகள் கொண்டு இசை நிகழ்சியும் நடாத்தப்பட்டது.இது இலங்கையில் இரண்டாவது அதி கூடிய வீணை இசை கலைஞர்களின் நிகழ்சி என சொல்லப்படுகிறது. கொழும்பு தமிழ் சங்கத்தினரால் சில வருடங்களுக்கு முன்னர் 76 வீணைகளுடன் இசை நிகழ்சி நடாத்தப்பட்டுள்ளதாகவும் அது இலங்கையில் முதலாவது சாதனை எனவும் இன்று மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் 21 வீணை இசை கச்சேரி நடாத்தப்பட்டது வட மாகாணத்தில் சாதனையாகும்.

Advertisement

Advertisement

Advertisement