• Nov 28 2024

பிற்போடப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் - எதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அறிவித்தார்? கேள்வியெழுப்பிய சஜித்..! samugammmedia

Chithra / Dec 1st 2023, 1:03 pm
image

 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுவரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்றை பிற்போடும் அதிகாரம் இல்லை.

எப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்? எந்தக் காரணத்தினால் இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

2025 வரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக எதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அறிவித்தார்?

எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், நிதியில்லை என்றும் பல காரணங்கள் கூறப்பட்டன.

தேர்தலை நடத்தினால், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் அழுத்தம் பிரயோகித்தது.

இந்தத் தேர்தலுக்காக எப்போது வேட்புமனுக்கள் கோரப்பட்டன? வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன?

வேட்புமனு தாக்கல் செய்த அரச அதிகாரிகள், இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.

இவர்களின் தொழில் இல்லாது போயுள்ளது. எத்தனை பேருக்கு அரச இவ்வாறு தொழில் இல்லாது போயுள்ளது?

இவர்களின் உரிமை மீறப்பட்டமைக்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்ள வேண்டும்? மீண்டும் இவர்களை எப்போது சேவையில் இணைத்துக் கொள்வீர்கள்?

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? தேர்தலை பிற்போட்டமையால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் காரணம்? என அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.


பிற்போடப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் - எதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அறிவித்தார் கேள்வியெழுப்பிய சஜித். samugammmedia  உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுவரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்றை பிற்போடும் அதிகாரம் இல்லை.எப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் எந்தக் காரணத்தினால் இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.2025 வரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக எதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அறிவித்தார்எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், நிதியில்லை என்றும் பல காரணங்கள் கூறப்பட்டன.தேர்தலை நடத்தினால், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் அழுத்தம் பிரயோகித்தது.இந்தத் தேர்தலுக்காக எப்போது வேட்புமனுக்கள் கோரப்பட்டன வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவேட்புமனு தாக்கல் செய்த அரச அதிகாரிகள், இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.இவர்களின் தொழில் இல்லாது போயுள்ளது. எத்தனை பேருக்கு அரச இவ்வாறு தொழில் இல்லாது போயுள்ளதுஇவர்களின் உரிமை மீறப்பட்டமைக்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்ள வேண்டும் மீண்டும் இவர்களை எப்போது சேவையில் இணைத்துக் கொள்வீர்கள்உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது தேர்தலை பிற்போட்டமையால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் காரணம் என அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement