• May 20 2024

உணவகங்களில் டிமிக்கி கொடுப்பவர்களுக்கு கொதிநீரால் ஊற்றுங்கள்..! உத்தரவிட்ட அசேல சம்பத் samugammedia

Chithra / Jul 5th 2023, 11:59 am
image

Advertisement


பழம்பெரும் பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாப்பிட்ட பின்னர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு உணவகங்கள் மற்றும் கேன்டீன் உரிமையாளர்கள் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“அப்படிப்பட்டவர்களுக்கு வெந்நீர் அல்லது கழிவு நீரை ஊற்றுமாறு உணவகம் மற்றும் கேன்டீன் உரிமையாளர்களுக்கு நான் உத்தரவிடுகிறேன். அல்லது அத்தகையவர்களின் முகத்தை ஃபிரைட் ரைஸ் கலவை சட்டியால் நேரடியாக அடிக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஹோட்டல், கேன்டீன் உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் உணவுகளை தயார் செய்கிறார்கள்.

சில அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் உணவைப் பணம் செலுத்தாமல் பெறுவது வழக்கம், என்றும் அவர் குறிப்பிட்டார்.


பாடகர் சமன் சில்வா மற்றும் குழுவினர் சனிக்கிழமை (01) இரவு பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று உணவு ஒடர் செய்திருந்தனர்.

பின்னர் சில்வாவுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அவர் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உணவகத்தின் ஊழியர்கள் பலர் காயமடைந்ததுடன், உணவகத்தில் இருந்த சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.


உணவகங்களில் டிமிக்கி கொடுப்பவர்களுக்கு கொதிநீரால் ஊற்றுங்கள். உத்தரவிட்ட அசேல சம்பத் samugammedia பழம்பெரும் பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.சாப்பிட்ட பின்னர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு உணவகங்கள் மற்றும் கேன்டீன் உரிமையாளர்கள் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.“அப்படிப்பட்டவர்களுக்கு வெந்நீர் அல்லது கழிவு நீரை ஊற்றுமாறு உணவகம் மற்றும் கேன்டீன் உரிமையாளர்களுக்கு நான் உத்தரவிடுகிறேன். அல்லது அத்தகையவர்களின் முகத்தை ஃபிரைட் ரைஸ் கலவை சட்டியால் நேரடியாக அடிக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஹோட்டல், கேன்டீன் உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் உணவுகளை தயார் செய்கிறார்கள்.சில அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் உணவைப் பணம் செலுத்தாமல் பெறுவது வழக்கம், என்றும் அவர் குறிப்பிட்டார்.பாடகர் சமன் சில்வா மற்றும் குழுவினர் சனிக்கிழமை (01) இரவு பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று உணவு ஒடர் செய்திருந்தனர்.பின்னர் சில்வாவுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அவர் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயற்சித்துள்ளார்.இந்த சம்பவத்தில் உணவகத்தின் ஊழியர்கள் பலர் காயமடைந்ததுடன், உணவகத்தில் இருந்த சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement