• May 09 2024

காலநிலையில் ஏற்பட்ட மாற்றம்..! கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! samugammedia

Chithra / Jul 5th 2023, 12:13 pm
image

Advertisement

கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்பு பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மகாவெலி நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் வினாடிக்கு 2500 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகவும் மகாவெலி நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியை அண்மித்து வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


காலநிலையில் ஏற்பட்ட மாற்றம். கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.இதற்கமைய திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட கடற்பரப்பு பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, மத்திய மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மகாவெலி நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் வினாடிக்கு 2500 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகவும் மகாவெலி நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் அப்பகுதியை அண்மித்து வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement