• May 17 2024

உயர்தர பரீட்சை காலத்திலும் மின்வெட்டா? வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Jan 14th 2023, 2:11 pm
image

Advertisement

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள், எதிர்வரும் 23ம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சைகளில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 709 பாடசாலை மற்றும் பிரத்தியேக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.

நாடு முழுவதும் உள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலப் பகுதியில், உயர்தர பரீட்சைகளை தடையின்றி நடத்துவது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்;த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

உயர்தர பரீட்சை காலத்திலும் மின்வெட்டா வெளியான விசேட அறிவிப்பு இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார சபை உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள், எதிர்வரும் 23ம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளது.இந்த பரீட்சைகளில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 709 பாடசாலை மற்றும் பிரத்தியேக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.நாடு முழுவதும் உள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலப் பகுதியில், உயர்தர பரீட்சைகளை தடையின்றி நடத்துவது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்;த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement