• May 18 2024

உலகின் மிகப் பிரபலமான உணவகத்திற்கு ஏற்பட்ட நிலை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Sharmi / Jan 14th 2023, 2:04 pm
image

Advertisement

டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள உலகின் மிகப் பிரபலமான நோமா உணவகம் வரும் 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் உள்ள நோமா உணவகம் உலக அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும்.

ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், பல ஆண்டுகளாக உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது.

ரெஸ்டாரண்ட்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் நோமா உணவகம் 5 முறை முதலிடத்தை பிடித்திருக்கிறது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான உலகின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலிலும் நோமா உணவகம் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில், வென்றுள்ளது.

இவ்வாறு மிக பிரபலமடைந்த நோவா உணவகம் 2021ஆம் ஆண்டில் கொரோனா தாக்கத்தின் போது ஏற்பட்ட லாக் டவுண் பிரச்சினைகளால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இதனால், நோமா உணவகத்தின் கட்டிடம் வரும் 2025 ஆம் ஆண்டு உணவு கண்டுபிடிப்புகளுக்கான பிரமாண்ட ஆய்வகமாக மாற்றப்படும் என கூறப்படுகின்றது .

உலகின் மிகப் பிரபலமான உணவகத்திற்கு ஏற்பட்ட நிலை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள உலகின் மிகப் பிரபலமான நோமா உணவகம் வரும் 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் உள்ள நோமா உணவகம் உலக அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும்.ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், பல ஆண்டுகளாக உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது.ரெஸ்டாரண்ட்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த பட்டியலில் நோமா உணவகம் 5 முறை முதலிடத்தை பிடித்திருக்கிறது.மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான உலகின் 50 சிறந்த உணவகங்களின் பட்டியலிலும் நோமா உணவகம் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில், வென்றுள்ளது.இவ்வாறு மிக பிரபலமடைந்த நோவா உணவகம் 2021ஆம் ஆண்டில் கொரோனா தாக்கத்தின் போது ஏற்பட்ட லாக் டவுண் பிரச்சினைகளால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.இதனால், நோமா உணவகத்தின் கட்டிடம் வரும் 2025 ஆம் ஆண்டு உணவு கண்டுபிடிப்புகளுக்கான பிரமாண்ட ஆய்வகமாக மாற்றப்படும் என கூறப்படுகின்றது .

Advertisement

Advertisement

Advertisement