• Nov 26 2024

22 பாடசாலைகளில் மின்துண்டிப்பு..! இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Dec 20th 2023, 8:36 am
image

 

மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் நேற்று (19) மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் 22 பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளின் மின் கட்டணம் வலயக் கல்வி அலுவலகங்களினால் செலுத்தப்பட்டு வருகின்றதுடன், 

பல மாதங்களாக குறித்த பாடசாலைகளில் நிலுவையிலுள்ள மின் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகள் மின்சார கட்டணமாக 25 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக வருட இறுதியில் நடைபெறும் திருவிழாக்கள், கலாசார நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

22 பாடசாலைகளில் மின்துண்டிப்பு. இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை  மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 22 பாடசாலைகளில் நேற்று (19) மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் 22 பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.குறித்த பாடசாலைகளின் மின் கட்டணம் வலயக் கல்வி அலுவலகங்களினால் செலுத்தப்பட்டு வருகின்றதுடன், பல மாதங்களாக குறித்த பாடசாலைகளில் நிலுவையிலுள்ள மின் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பாடசாலைகள் மின்சார கட்டணமாக 25 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.மின்வெட்டு காரணமாக வருட இறுதியில் நடைபெறும் திருவிழாக்கள், கலாசார நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement