• Feb 12 2025

வெள்ளி வரை தொடரும் மின்வெட்டு? வெளியான தகவல்

Chithra / Feb 11th 2025, 12:13 pm
image


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பிரதான மின்கட்டமைப்போடு இணைக்கப்படும் வரை, குறைந்தபட்சம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாட்டின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலக்கரி மின் நிலையத்தை விரைவில் சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும், ஆனால் வாரம் முழுவதும் மின்வெட்டு நீடிக்கும் என்றும் தெரியவருகின்றது.

இன்று நாட்டின் பல மாவட்டங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது. 

மின்சார நிலையத்தை மீண்டும் மின்கட்டமைப்போடு இணைக்க குறைந்தது ஐந்து நாட்கள் ஆகும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. 

வெள்ளி வரை தொடரும் மின்வெட்டு வெளியான தகவல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பிரதான மின்கட்டமைப்போடு இணைக்கப்படும் வரை, குறைந்தபட்சம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாட்டின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நிலக்கரி மின் நிலையத்தை விரைவில் சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும், ஆனால் வாரம் முழுவதும் மின்வெட்டு நீடிக்கும் என்றும் தெரியவருகின்றது.இன்று நாட்டின் பல மாவட்டங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார நிலையத்தை மீண்டும் மின்கட்டமைப்போடு இணைக்க குறைந்தது ஐந்து நாட்கள் ஆகும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Advertisement

Advertisement

Advertisement