• May 19 2024

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வீதிகளில் மகக்ள் தஞ்சம்..! samugammedia

Tamil nila / Sep 9th 2023, 7:50 am
image

Advertisement

சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலியில் கடந்த 2010ஆம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து உண்டான சுனாமியில் 526 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வீதிகளில் மகக்ள் தஞ்சம். samugammedia சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சிலியில் கடந்த 2010ஆம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.அதைத்தொடர்ந்து உண்டான சுனாமியில் 526 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement