• May 19 2024

500ற்கும் அதிக உயிர்களை காவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Chithra / Feb 6th 2023, 2:11 pm
image

Advertisement

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.

7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு (01:17 GMT) காஸியான்டெப் நகருக்கு அருகே 17.9 கி.மீ (11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் பெரும் இடிபாடுகளின் கீழ் மீட்புப் பணிகள் இடம்பெறுகின்றன.

தமது நாட்டில் 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்தார்.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியில் 2,323 பேரும், சிரியாவில் 639 பேரும் காயமடைந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

500ற்கும் அதிக உயிர்களை காவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு (01:17 GMT) காஸியான்டெப் நகருக்கு அருகே 17.9 கி.மீ (11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் பெரும் இடிபாடுகளின் கீழ் மீட்புப் பணிகள் இடம்பெறுகின்றன.தமது நாட்டில் 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்தார்.காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதேவேளை, துருக்கியில் 2,323 பேரும், சிரியாவில் 639 பேரும் காயமடைந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement