• May 21 2024

"விலையுயர்ந்த விதைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா..!samugammedia

Sharmi / Jul 10th 2023, 12:59 pm
image

Advertisement

நல்லூர்  வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையாவின் 100வது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லினின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் முனைவர் சி.சிவலிங்காராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியீட்டு உரையினை ,கவிஞர்.ரஜிதா அரிச்சந்திரனும் மதிப்பீட்டுரையினை கவிஞர்.வைவரவநாதன் வசீகரனும் நிகழ்த்தினர்.

ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் சதா கனகலிங்கம் வாழ்த்துரையினை நிகழ்த்தினார்.

மேலும், இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சட்டத்தரணி சுதா கஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன் நூலின் முதல் பிரதியை லயன் குமாரசாமி ஜெயந்தன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் நிறைவில் நூலாசிரியர் கெங்கா ஸ்டான்லி ஊர் மக்களினால் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் பெருமளவிலான மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



"விலையுயர்ந்த விதைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா.samugammedia நல்லூர்  வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையாவின் 100வது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லினின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.பேராசிரியர் முனைவர் சி.சிவலிங்காராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியீட்டு உரையினை ,கவிஞர்.ரஜிதா அரிச்சந்திரனும் மதிப்பீட்டுரையினை கவிஞர்.வைவரவநாதன் வசீகரனும் நிகழ்த்தினர்.ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் சதா கனகலிங்கம் வாழ்த்துரையினை நிகழ்த்தினார்.மேலும், இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சட்டத்தரணி சுதா கஜேந்திரகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன் நூலின் முதல் பிரதியை லயன் குமாரசாமி ஜெயந்தன் பெற்றுக்கொண்டார்.நிகழ்வின் நிறைவில் நூலாசிரியர் கெங்கா ஸ்டான்லி ஊர் மக்களினால் கௌரவிக்கப்பட்டார்.இந் நிகழ்வில் பெருமளவிலான மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement