• Jan 12 2025

யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Chithra / Jan 12th 2025, 3:22 pm
image


பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன்  சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின் மாணவர்களுக்கு யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பொழுது மாணவர்கள் கலை நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக 73 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், யாழ் இந்திய துணைதூதரக அதிகாரிகளான நாகராஜன், செல்வி ரம்யா,  கலைமகள் இலவசக்கல்வி நிலைய உபதலைவர் அருள் சிவானந்தன், அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர், கலைமகள் சனசமூக நிலையத்தினர் ,சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மக்களின் பங்களிப்புடன்  சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின் மாணவர்களுக்கு யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதன் பொழுது மாணவர்கள் கலை நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக 73 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், யாழ் இந்திய துணைதூதரக அதிகாரிகளான நாகராஜன், செல்வி ரம்யா,  கலைமகள் இலவசக்கல்வி நிலைய உபதலைவர் அருள் சிவானந்தன், அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர், கலைமகள் சனசமூக நிலையத்தினர் ,சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement