• Nov 28 2024

விரைவில் இந்தியா பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர? - முதல் வெளிநாட்டு பயணம் தீர்மானம்

Chithra / Oct 4th 2024, 11:42 am
image

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக அனுரகுமார இந்தியா செல்லவுள்ளார். 

எனினும், இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பெரும்பாலும், ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அனுரகுமார திஸாநாயக்கவை, முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகராக ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியா பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர - முதல் வெளிநாட்டு பயணம் தீர்மானம்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக அனுரகுமார இந்தியா செல்லவுள்ளார். எனினும், இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.பெரும்பாலும், ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அனுரகுமார திஸாநாயக்கவை, முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகராக ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement