• Mar 26 2025

ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்!

Chithra / Mar 24th 2025, 11:20 am
image

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நாடாளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால், அவர் நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர்.

அத்தோடு, அவர் ஓய்வு பெற்றவுடன், அவர் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர்.

இந்த வழியில் இரண்டு ஓய்வூதியங்களை விரும்பவில்லை என்று அநுர குமார திசாநாயக்க கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறும் ஓய்வூதியப் பலன்களை நீக்குவதாக அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு, அவர் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி இயக்குநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து நாடாளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.ஒரு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால், அவர் நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர்.அத்தோடு, அவர் ஓய்வு பெற்றவுடன், அவர் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர்.இந்த வழியில் இரண்டு ஓய்வூதியங்களை விரும்பவில்லை என்று அநுர குமார திசாநாயக்க கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறும் ஓய்வூதியப் பலன்களை நீக்குவதாக அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு, அவர் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.இந்தநிலையில், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி இயக்குநருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement