• Nov 23 2024

வேட்பாளர் என்பதால் ஜனாதிபதியால் பொறுப்பில் இருந்து விலக முடியாது - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Chithra / Jul 31st 2024, 2:43 pm
image


சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.வேட்பாளர் என்ற காரணத்தால் அவரால் அந்த பொறுப்பில் இருந்து விலக முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தலுக்கு உரிய பணிகளை முன்னெடுப்பதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்காமல் இருப்பது தேர்தல் பணிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எவ்வாறாயினும் தேர்தல் பணிகளுக்கு உரிய கட்டளைகளை அல்லது அறிவிப்புக்களை விடுக்கும் போது அதிகாரம் பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபரிடம் காணப்படுவதால் உரிய பதவி வெற்றிடமாக கூடாது என்பது முக்கியமானது.

வாக்குச்சீட்டு உட்பட தேர்தல் பணிகளுக்காக பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச அச்சகத் திணைக்களத்துக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு திறைச்சேரிக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

தேர்தல் பணிகள் குறித்து எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளோம்.தேர்தல் பணிகள் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றன.

பொலிஸ் அதிபர் விவகாரம் குறித்து ஜனாதிபதி அண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முறைமை குறித்து நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இவ்விடயத்தில் ஆணைக்குழு தலையிட முடியாது.

ஆகவே அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் முரண்பாடற்ற தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்.

ஜனாதிபதியின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஒருமாதத்துக்கு குறையாமலும், இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலும் புதிய ஜனாதிபதி ஒருவர் மக்கள் வாக்கெடுப்பு ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 33(4)  பிரிவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. வேட்பாளர் என்ற காரணத்தால் அவரால் அந்த பொறுப்பில் இருந்து விலக முடியாது என்றார். 

வேட்பாளர் என்பதால் ஜனாதிபதியால் பொறுப்பில் இருந்து விலக முடியாது - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.வேட்பாளர் என்ற காரணத்தால் அவரால் அந்த பொறுப்பில் இருந்து விலக முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.தேர்தலுக்கு உரிய பணிகளை முன்னெடுப்பதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்காமல் இருப்பது தேர்தல் பணிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.எவ்வாறாயினும் தேர்தல் பணிகளுக்கு உரிய கட்டளைகளை அல்லது அறிவிப்புக்களை விடுக்கும் போது அதிகாரம் பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபரிடம் காணப்படுவதால் உரிய பதவி வெற்றிடமாக கூடாது என்பது முக்கியமானது.வாக்குச்சீட்டு உட்பட தேர்தல் பணிகளுக்காக பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அரச அச்சகத் திணைக்களத்துக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு திறைச்சேரிக்கு அறிவுறுத்தியுள்ளோம்.தேர்தல் பணிகள் குறித்து எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளோம்.தேர்தல் பணிகள் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றன.பொலிஸ் அதிபர் விவகாரம் குறித்து ஜனாதிபதி அண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முறைமை குறித்து நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இவ்விடயத்தில் ஆணைக்குழு தலையிட முடியாது.ஆகவே அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் முரண்பாடற்ற தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்.ஜனாதிபதியின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஒருமாதத்துக்கு குறையாமலும், இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலும் புதிய ஜனாதிபதி ஒருவர் மக்கள் வாக்கெடுப்பு ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும்.அரசியலமைப்பின் 33(4)  பிரிவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. வேட்பாளர் என்ற காரணத்தால் அவரால் அந்த பொறுப்பில் இருந்து விலக முடியாது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement