• May 19 2024

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரணிலே ஜனாதிபதி...! முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 21st 2023, 12:35 pm
image

Advertisement

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்றும், அவருக்கு பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் எனவும் தற்போதைய ஜனாதிபதி ஒருவரே நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன கம்பஹாவில் தெரிவித்தார்.

தொகுதி அமைப்பாளர் திரு.வருண ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஐ.தே.கவின் கம்பஹா தொகுதி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் வரவுள்ளதாகவும், அந்தத் தேர்தலில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதன் காரணமாக பல கட்சிகள் மற்றும் கட்சியை விட்டு வெளியேறிய பெருந்தொகையானவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.


நாட்டை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்காலத்தில் மேலும் பல தரப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்த ருவான் விஜயவர்தன, இந்த நாடு ஏற்பட்டுள்ள நிலையில் இருந்து மீளக்கூடிய ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவே காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கைகோர்ப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

அக்கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் கருத்துத் தெரிவிக்கையில், மாறிவரும் உலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனவே திறமையும் படைப்பாற்றலும் மிக்கவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றி வருகின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரணிலே ஜனாதிபதி. முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல் samugammedia அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்றும், அவருக்கு பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் எனவும் தற்போதைய ஜனாதிபதி ஒருவரே நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன கம்பஹாவில் தெரிவித்தார்.தொகுதி அமைப்பாளர் திரு.வருண ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஐ.தே.கவின் கம்பஹா தொகுதி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் வரவுள்ளதாகவும், அந்தத் தேர்தலில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதன் காரணமாக பல கட்சிகள் மற்றும் கட்சியை விட்டு வெளியேறிய பெருந்தொகையானவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.நாட்டை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்காலத்தில் மேலும் பல தரப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்த ருவான் விஜயவர்தன, இந்த நாடு ஏற்பட்டுள்ள நிலையில் இருந்து மீளக்கூடிய ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்கவே காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கைகோர்ப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.அக்கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் கருத்துத் தெரிவிக்கையில், மாறிவரும் உலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனவே திறமையும் படைப்பாற்றலும் மிக்கவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement