• Nov 28 2024

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவு!

Chithra / Jul 24th 2024, 11:58 am
image

 

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் வலுவான வழக்கை உறுதி செய்வதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த  9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே உயர் நீதிமன்றம் குறித்த  தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவு  பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் வலுவான வழக்கை உறுதி செய்வதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த  9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே உயர் நீதிமன்றம் குறித்த  தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement