• Jul 27 2024

அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி ரணில்..! அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன்..! சபையில் அமைச்சர் ரொஷான் அதிரடி samugammedia

Chithra / Nov 7th 2023, 2:40 pm
image

Advertisement



இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என ரொஷான் ரணசிங்க, இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தாம் நியமித்த இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நீக்கவே முடியாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் நியமித்த இடைக்கால குழு குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 20-20 போட்டித் தொடரில் நேர்ந்த, ஊழல் மோசடிகள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளரினால் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்கவே, நாம் இந்தக் குழவை நியமித்திருந்தோம்.

இன்று இந்தக் குழுவுக்கே தற்போது நிதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதன்ஊடாக, மீண்டும் ஊழல்வாதிகள் இன்று முதல் பணியில் இணைந்துக் கொள்வார்கள்.

இந்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், கிரிக்கெட் நிர்வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரியமைக்கு இணங்கத்தான் நான், இந்த மாற்றங்களை செய்திருந்தேன். என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி ரணில். அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன். சபையில் அமைச்சர் ரொஷான் அதிரடி samugammedia இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என ரொஷான் ரணசிங்க, இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.அத்தோடு தாம் நியமித்த இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நீக்கவே முடியாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் தாம் நியமித்த இடைக்கால குழு குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 20-20 போட்டித் தொடரில் நேர்ந்த, ஊழல் மோசடிகள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளரினால் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்கவே, நாம் இந்தக் குழவை நியமித்திருந்தோம்.இன்று இந்தக் குழுவுக்கே தற்போது நிதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இதன்ஊடாக, மீண்டும் ஊழல்வாதிகள் இன்று முதல் பணியில் இணைந்துக் கொள்வார்கள்.இந்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், கிரிக்கெட் நிர்வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரியமைக்கு இணங்கத்தான் நான், இந்த மாற்றங்களை செய்திருந்தேன். என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement