• May 17 2024

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தல்

Chithra / Apr 2nd 2024, 7:47 am
image

Advertisement

 

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. இருப்பினும் உண்மையை மற்றும் யதார்த்தம் பற்றி அவதானம் செலுத்த வேண்டும்.

கூரகல விகாரை விவகாரத்தை தொடர்புப்படுத்தி ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள்  ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அந்த வழக்குக்கு அமையவே ஞானசார தேரருக்கு நான்காண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூரகல விகாரை 2000 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த விகாரையை  அண்மித்த பகுதியில் இருந்த  பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை முஸ்லிம் அடிப்படைவாதிகள்   ஆசிட் திரவம் ஊற்றி அழித்து, அடையாளங்களை சிதைத்து கட்டிடங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு எதிராகவே ஞானசார தேரர் குரல் கொடுத்தார்.

பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் போது பௌத்தர்களின் மனம் வேதனையடையாதா? கூரகல விகாரையின் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கபபட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரரே  ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால் அதனை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை. விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தோற்றுவித்தது.

சுதேச முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாகியுள்ளன. பௌத்த அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில்  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்து அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படும் தேவை தற்போது காணப்படுகிறது என்பதை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தல்  ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. இருப்பினும் உண்மையை மற்றும் யதார்த்தம் பற்றி அவதானம் செலுத்த வேண்டும்.கூரகல விகாரை விவகாரத்தை தொடர்புப்படுத்தி ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள்  ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அந்த வழக்குக்கு அமையவே ஞானசார தேரருக்கு நான்காண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கூரகல விகாரை 2000 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த விகாரையை  அண்மித்த பகுதியில் இருந்த  பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை முஸ்லிம் அடிப்படைவாதிகள்   ஆசிட் திரவம் ஊற்றி அழித்து, அடையாளங்களை சிதைத்து கட்டிடங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு எதிராகவே ஞானசார தேரர் குரல் கொடுத்தார்.பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் போது பௌத்தர்களின் மனம் வேதனையடையாதா கூரகல விகாரையின் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கபபட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரரே  ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால் அதனை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை. விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தோற்றுவித்தது.சுதேச முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாகியுள்ளன. பௌத்த அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.இலங்கையர்கள் என்ற அடிப்படையில்  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்து அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படும் தேவை தற்போது காணப்படுகிறது என்பதை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement