• May 19 2024

முப்பதாவது தடவையாக நாடாளுமன்றத்துக்கு இன்று செல்லும் ஜனாதிபதி!

Chithra / Feb 8th 2023, 7:47 am
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இன்று 30 ஆவது தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.

ஜனாதிபதிகள் யாரும் அதிகமாக நாடாளுமன்றம் செல்வதில்லை. நாடாளுமன்றத்தை ஒத்திப்போடுவதற்கு அல்லது கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கே செல்வார்கள்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க அதில் இருந்து வித்தியாசப்படுகின்றார்.அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றது

முதல் கடந்த மாதம் வரை 29 தடவைகள் நாடாளுமன்றம் சென்றுள்ளார். அதாவது, கடந்த வருடம் ஜூலை 20 முதல்இந்த வருடம் ஜனவரி 18 வரை 29 தடவைகள் அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில், 30 ஆவது தடவையாக இன்று சபைக்குச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கின்றார். அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இன்று இடம்பெறும்.

முப்பதாவது தடவையாக நாடாளுமன்றத்துக்கு இன்று செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இன்று 30 ஆவது தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.ஜனாதிபதிகள் யாரும் அதிகமாக நாடாளுமன்றம் செல்வதில்லை. நாடாளுமன்றத்தை ஒத்திப்போடுவதற்கு அல்லது கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கே செல்வார்கள்.ஆனால், ரணில் விக்கிரமசிங்க அதில் இருந்து வித்தியாசப்படுகின்றார்.அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதுமுதல் கடந்த மாதம் வரை 29 தடவைகள் நாடாளுமன்றம் சென்றுள்ளார். அதாவது, கடந்த வருடம் ஜூலை 20 முதல்இந்த வருடம் ஜனவரி 18 வரை 29 தடவைகள் அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.இந்நிலையில், 30 ஆவது தடவையாக இன்று சபைக்குச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்கின்றார். அதேவேளை, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இன்று இடம்பெறும்.

Advertisement

Advertisement

Advertisement