• Nov 26 2024

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி கள விஜயம்.!

Chithra / Jun 3rd 2024, 4:12 pm
image

 

கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று பிற்பகல்  மேற்கொண்டார்.

அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி கள விஜயம்.  கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று பிற்பகல்  மேற்கொண்டார்.அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப் பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement