• May 06 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்? அறிவிப்புக்கு நாள் குறித்த மொட்டு கட்சி...!

Sharmi / Apr 24th 2024, 10:22 am
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மேதின பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணியை இம்முறை கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதுடன், ஏனையோர் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அறிவித்துள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க, பியால் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர மற்றும் பொதுஜன பெரமுனவின் இளைஞர்கள் பலரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் உள்ளிட்ட குழுவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து களமிறங்கத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேதின நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கு நாள் குறித்த மொட்டு கட்சி. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மேதின பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணியை இம்முறை கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதுடன், ஏனையோர் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அறிவித்துள்ளனர்.பிரசன்ன ரணதுங்க, பியால் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர மற்றும் பொதுஜன பெரமுனவின் இளைஞர்கள் பலரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் உள்ளிட்ட குழுவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து களமிறங்கத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் மேதின நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement