• Nov 22 2024

சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் - பாரியளவில் அதிகரித்த பட்டாசு விற்பனை!

Chithra / Sep 11th 2024, 9:06 am
image

 

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டாசுகளுக்கான தேவை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏனைய ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் பட்டாசு விற்பனை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படும்.

இந்த காலக்கட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்திற்காகவே தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசார கூட்டங்கள் ஆரம்பமானதும் பட்டாசுகளின் விற்பனையில் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பட்டாசு விற்பனையாளர்களுக்கு இம்முறை மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் - பாரியளவில் அதிகரித்த பட்டாசு விற்பனை  இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பட்டாசுகளுக்கான தேவை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஏனைய ஆண்டுகளில் இந்த காலகட்டத்தில் பட்டாசு விற்பனை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படும்.இந்த காலக்கட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்திற்காகவே தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசார கூட்டங்கள் ஆரம்பமானதும் பட்டாசுகளின் விற்பனையில் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பட்டாசு விற்பனையாளர்களுக்கு இம்முறை மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement