• Nov 19 2024

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் - நாளை விவாதம்!

Tamil nila / Jul 10th 2024, 9:12 pm
image

ஜனாதிபதி தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துவதன் தேவை தொடர்பில் பாராளுமன்ற விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரிஎல்ல ஆகியோரால் கூட்டாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 

நாளை வாய்மூல விடைக்கான வினாக்களை தொடர்ந்து, காலை 10.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமைய 2024 செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதியினுள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 

அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஒருவருடத்தினால் நீடிப்பதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக காரணமாக உரிய காலப்பகுதியில், உரிய நாளில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செய்தியொன்றை வழங்குவதற்காகவே இந்த விவாதம் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் - நாளை விவாதம் ஜனாதிபதி தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துவதன் தேவை தொடர்பில் பாராளுமன்ற விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று  நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரிஎல்ல ஆகியோரால் கூட்டாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. நாளை வாய்மூல விடைக்கான வினாக்களை தொடர்ந்து, காலை 10.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமைய 2024 செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதியினுள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஒருவருடத்தினால் நீடிப்பதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக காரணமாக உரிய காலப்பகுதியில், உரிய நாளில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செய்தியொன்றை வழங்குவதற்காகவே இந்த விவாதம் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement