• Sep 23 2024

சீன – இந்திய ஆதிக்கத்துக்கு மத்தியில் மாலைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல்! !samugammedia

Tamil nila / Sep 9th 2023, 8:13 pm
image

Advertisement

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையான அதிகாரப் போட்டி நிலவும் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான மாலைத்தீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

மாலைத்தீவு முழுவதும் உள்ள மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததுடன், உலகில் மாலைத்தீவு மக்கள் வாழும் சில நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் பெருமளவில் மாலைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். கல்வி, தொழில் உட்பட பல்வேறு துறைகளில் மாலைத்தீவு மக்கள் இலங்கையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சூழலில் அவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் மாலைத்தீவு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

வாக்களிப்பதற்காக 850 மாலைத்தீவு பிரஜைகள் பதிவுசெய்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக இலங்கையில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் அறிவித்துள்ளது.

இவர்களது வாக்குப்பதிவு தொடர்பிலான தகவல்கள் மாலைத்தீவு தேசிய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படவுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான செல்வாக்குக்கு மத்தியில் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இரண்டாவது ஐந்தாண்டு பதவிக் காலத்தை விரும்பி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் "இந்தியா-முதல்" என்ற கொள்கையை வலியுறுத்தினார். சீனாவுக்கு எதிரான போக்கையே அவர் தமது ஆட்சியில் விரும்பியிருந்தார்.

கருத்துக் கணிப்புகளில் இப்ராஹிம் சோலி, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவரது முக்கிய போட்டியாளரான மொஹமட் முய்ஸுவை ஆதரிக்கும் கூட்டணி, சீனாவுடன் நெருக்கமான கூட்டணியாக உள்ளது. இந்தியா அவுட்" பிரச்சாரத்தைத்தையும் இந்த அணியினர் தேர்தலில் முன்வைத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

சீன – இந்திய ஆதிக்கத்துக்கு மத்தியில் மாலைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் samugammedia இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையான அதிகாரப் போட்டி நிலவும் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான மாலைத்தீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.மாலைத்தீவு முழுவதும் உள்ள மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததுடன், உலகில் மாலைத்தீவு மக்கள் வாழும் சில நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.இலங்கையில் பெருமளவில் மாலைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். கல்வி, தொழில் உட்பட பல்வேறு துறைகளில் மாலைத்தீவு மக்கள் இலங்கையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சூழலில் அவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் மாலைத்தீவு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.வாக்களிப்பதற்காக 850 மாலைத்தீவு பிரஜைகள் பதிவுசெய்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக இலங்கையில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் அறிவித்துள்ளது.இவர்களது வாக்குப்பதிவு தொடர்பிலான தகவல்கள் மாலைத்தீவு தேசிய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படவுள்ளது.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான செல்வாக்குக்கு மத்தியில் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இரண்டாவது ஐந்தாண்டு பதவிக் காலத்தை விரும்பி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் "இந்தியா-முதல்" என்ற கொள்கையை வலியுறுத்தினார். சீனாவுக்கு எதிரான போக்கையே அவர் தமது ஆட்சியில் விரும்பியிருந்தார்.கருத்துக் கணிப்புகளில் இப்ராஹிம் சோலி, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.அவரது முக்கிய போட்டியாளரான மொஹமட் முய்ஸுவை ஆதரிக்கும் கூட்டணி, சீனாவுடன் நெருக்கமான கூட்டணியாக உள்ளது. இந்தியா அவுட்" பிரச்சாரத்தைத்தையும் இந்த அணியினர் தேர்தலில் முன்வைத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement