• Feb 01 2025

நாட்டில் வீதி விபத்துக்களைக் குறைக்க ஜனாதிபதி செயலணி - விடுக்கப்பட்ட கோரிக்கை

Chithra / Feb 1st 2025, 8:42 am
image


நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். 

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார்.


நாட்டில் வீதி விபத்துக்களைக் குறைக்க ஜனாதிபதி செயலணி - விடுக்கப்பட்ட கோரிக்கை நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement