• May 17 2024

நிலவும் சீரற்ற காலநிலை...! 53,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு...! வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவத்தினர்...!samugammedia

Sharmi / Oct 7th 2023, 3:57 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13 ஆயிரத்து 27 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளத்தினால் 39 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டம் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலவர அறிக்கையின்படி,

சீரற்ற காலநிலையால் 725 வீடுகள் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட சுமார் 381 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு இராணுவத்தினால் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.


நிலவும் சீரற்ற காலநிலை. 53,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு. வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவத்தினர்.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13 ஆயிரத்து 27 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை வெள்ளத்தினால் 39 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டம் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலவர அறிக்கையின்படி,சீரற்ற காலநிலையால் 725 வீடுகள் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட சுமார் 381 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு இராணுவத்தினால் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement