• Feb 07 2025

பண்டிகைக் காலங்களில் தொடர்ந்தும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் கவலை

Chithra / Dec 5th 2024, 4:04 pm
image


நத்தார் பண்டிகை வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும், அதிகரித்த விலையும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு தேங்காய் 180 - 200 ரூபா வரை விற்பனையாகின்றது. 

இதேவேளை நாட்டு, குத்தரிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றபோது, 280 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

சமையல் எரிவாயுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

நாளாந்த கூலி வேலைக்கு செல்கின்ற தொழிலாளர்கள், தற்போது மழை காரணமாக தொழில்களும் இல்லாத நிலையில்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.


பண்டிகைக் காலங்களில் தொடர்ந்தும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை - மக்கள் கவலை நத்தார் பண்டிகை வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும், அதிகரித்த விலையும் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஒரு தேங்காய் 180 - 200 ரூபா வரை விற்பனையாகின்றது. இதேவேளை நாட்டு, குத்தரிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றபோது, 280 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. சமையல் எரிவாயுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. நாளாந்த கூலி வேலைக்கு செல்கின்ற தொழிலாளர்கள், தற்போது மழை காரணமாக தொழில்களும் இல்லாத நிலையில்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement