• May 09 2024

1 கிலோ வெண்டைக்காய் ரூ 816 : உச்சத்தைத் தொட்ட காய்கறிகளின் விலை நொந்துபோன லண்டன்வாசி! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 12:37 pm
image

Advertisement

நம் தாயகத்தை விட்டு எந்த நாடுகளுக்குச் சென்றாலும் சில நாள்கள் உற்சாகத்தில் சுற்றித்திரிவோம். ஆனால் பல நாள்கள் அங்கு வாழ்வது என்பது பலருக்கும் ஏற்றதாக அமையாது. ஆம் யதார்த்தமாக வாழ்க்கையை வாழ முடியாத நிலை தான் ஏற்டும். நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல சொந்த பந்தங்களை விட்டு செல்வதே மிகக் கொடிய வலியாக இருக்கும் நிலையில், சாப்பிடும் உணவுப்பொருள்களின் விலை வழக்கத்திற்கு மாறாக உச்சத்தைத் தொட்டால் எப்படி இருக்கும்.. யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த நிலையை அனுபவித்து வருகின்றனர் லண்டனில் வாழும் இந்திய மக்கள்.

சமீபத்தில் லண்டனில் உச்சத்தைத் தொட்டு வரும் உணவுப்பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைக் குறித்து லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர் டிவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் “ லண்டன் நன்றாகத் தான் உள்ளது.. ஆனால் கோவாக்காய் 900 ரூபாய்க்கு விற்பது தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஆம் சமீபத்தில் சில தினங்களாக லண்டனில், கோவக்காய் மற்றும் சுரைக்காயின் விலை 8.99 பவுண்டுகள் அதாவது தோராயமாக ரூ.919ம், வெண்டைக்காயின் விலை 7.99 பவுண்டுகள் அதாவது தோராயமாக ரூ.816 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று தான் பச்சை மிளகாய், தக்காளி, பாகற்காய், கத்தரி போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியை இணையத்தில் பார்த்தது முதல் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த காய்கறிகள் என்றும், இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவில் விளைவிக்கப்படவில்லை என்பதால் இந்த விலை உயர்வா? என தெரிவித்துள்ளார். எனவே தான் லண்டன் முழுவதும் காய்கறிகளை இறக்குமதி செய்வது விலை உயர்ந்ததாக உள்ளது என கூறியுள்ளார்.

பயனர் ஒருவர், பச்சை மிளகாயின் விலையும், கோவக்காயின் விலையும் ஒன்றாக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பயனர் ஒருவர், ”இது உள்நாட்டில் வளர்க்கப்பட்டதா அல்லது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த காய்கறின் விலை உயர்வு என்பது இப்படி லண்டனில் வாழும் இந்திய மக்களின் பொருளாதார சுமையாக அமைந்துள்ளது என்றும், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமா..? என்ற கேள்விகளோடு நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். என்ன இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் இந்தியர்கள் தான் பெருமளவில் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், இந்த விலை உயர்வு நிச்சயம் அவர்களுக்கு பெரும் பொருளதார நெருக்கடியைத் தான் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

1 கிலோ வெண்டைக்காய் ரூ 816 : உச்சத்தைத் தொட்ட காய்கறிகளின் விலை நொந்துபோன லண்டன்வாசி samugammedia நம் தாயகத்தை விட்டு எந்த நாடுகளுக்குச் சென்றாலும் சில நாள்கள் உற்சாகத்தில் சுற்றித்திரிவோம். ஆனால் பல நாள்கள் அங்கு வாழ்வது என்பது பலருக்கும் ஏற்றதாக அமையாது. ஆம் யதார்த்தமாக வாழ்க்கையை வாழ முடியாத நிலை தான் ஏற்டும். நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல சொந்த பந்தங்களை விட்டு செல்வதே மிகக் கொடிய வலியாக இருக்கும் நிலையில், சாப்பிடும் உணவுப்பொருள்களின் விலை வழக்கத்திற்கு மாறாக உச்சத்தைத் தொட்டால் எப்படி இருக்கும். யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த நிலையை அனுபவித்து வருகின்றனர் லண்டனில் வாழும் இந்திய மக்கள்.சமீபத்தில் லண்டனில் உச்சத்தைத் தொட்டு வரும் உணவுப்பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைக் குறித்து லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர் டிவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் “ லண்டன் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் கோவாக்காய் 900 ரூபாய்க்கு விற்பது தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என கருத்தைப் பகிர்ந்துள்ளார்.ஆம் சமீபத்தில் சில தினங்களாக லண்டனில், கோவக்காய் மற்றும் சுரைக்காயின் விலை 8.99 பவுண்டுகள் அதாவது தோராயமாக ரூ.919ம், வெண்டைக்காயின் விலை 7.99 பவுண்டுகள் அதாவது தோராயமாக ரூ.816 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று தான் பச்சை மிளகாய், தக்காளி, பாகற்காய், கத்தரி போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.இந்த செய்தியை இணையத்தில் பார்த்தது முதல் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த காய்கறிகள் என்றும், இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவில் விளைவிக்கப்படவில்லை என்பதால் இந்த விலை உயர்வா என தெரிவித்துள்ளார். எனவே தான் லண்டன் முழுவதும் காய்கறிகளை இறக்குமதி செய்வது விலை உயர்ந்ததாக உள்ளது என கூறியுள்ளார்.பயனர் ஒருவர், பச்சை மிளகாயின் விலையும், கோவக்காயின் விலையும் ஒன்றாக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது எனவும், இது மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பயனர் ஒருவர், ”இது உள்நாட்டில் வளர்க்கப்பட்டதா அல்லது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த காய்கறின் விலை உயர்வு என்பது இப்படி லண்டனில் வாழும் இந்திய மக்களின் பொருளாதார சுமையாக அமைந்துள்ளது என்றும், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமா. என்ற கேள்விகளோடு நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். என்ன இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் இந்தியர்கள் தான் பெருமளவில் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், இந்த விலை உயர்வு நிச்சயம் அவர்களுக்கு பெரும் பொருளதார நெருக்கடியைத் தான் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Advertisement

Advertisement

Advertisement