கிளிநொச்சி மாவட்ட ஒப்பந்த வேலைகளுக்கான விலை நிர்ணயக் குழுக் கூட்டம் இன்று(24) காலை நடைபெற்றது.
குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தொழிலாளர் கூலி, வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், ஒப்பந்தக்காரர்களுக்கான விலை நிர்ணயங்களை இன்று இக்குழு ஊடாக தீர்மானங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையிலே அரச ஒப்பந்த வேலைகளை செய்து கொள்ள முடியும்.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், திணைக்களங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள், பச்சிலைப்பள்ளி உதவிப் பிரதேச செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விலை நிர்ணய குழுக் கூட்டம்.samugammedia கிளிநொச்சி மாவட்ட ஒப்பந்த வேலைகளுக்கான விலை நிர்ணயக் குழுக் கூட்டம் இன்று(24) காலை நடைபெற்றது.குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் தொழிலாளர் கூலி, வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.மேலும், ஒப்பந்தக்காரர்களுக்கான விலை நிர்ணயங்களை இன்று இக்குழு ஊடாக தீர்மானங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.இக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையிலே அரச ஒப்பந்த வேலைகளை செய்து கொள்ள முடியும்.இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், திணைக்களங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள், பச்சிலைப்பள்ளி உதவிப் பிரதேச செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.