• Nov 24 2024

இஸ்ரேல் பிரதமர் ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு எச்சரிக்கை!

Tharmini / Oct 14th 2024, 12:07 pm
image

“தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென”  இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இத்தாக்குதல்களினால் கடந்த 9 நாட்களில் மாத்திரம் வடக்கு காசாவில் 300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இதே போல, லெபனானின் நபாதியா நகரில் இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 1910ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்க்கெட் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 40 கடைகள் முற்றிலும் இடிந்தன. அஹெல் எல் குரான் மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாகின.

இந்நிலையில் லெபனான் இராணுவத்திற்கு உதவ, தெற்கு லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் ஐநா அமைதிப்படை வீரர்கள் மீதும் இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கி சண்டையிட்டு தாக்குதல் நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐநா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் கட்டரசிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். குறித்த அமைதிப்படையில் 34 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகக்து.

இஸ்ரேல் பிரதமர் ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு எச்சரிக்கை “தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென”  இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.இத்தாக்குதல்களினால் கடந்த 9 நாட்களில் மாத்திரம் வடக்கு காசாவில் 300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இதே போல, லெபனானின் நபாதியா நகரில் இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 1910ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்க்கெட் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 40 கடைகள் முற்றிலும் இடிந்தன. அஹெல் எல் குரான் மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாகின.இந்நிலையில் லெபனான் இராணுவத்திற்கு உதவ, தெற்கு லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் ஐநா அமைதிப்படை வீரர்கள் மீதும் இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கி சண்டையிட்டு தாக்குதல் நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் ஐநா அமைதிப்படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் கட்டரசிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். குறித்த அமைதிப்படையில் 34 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகக்து.

Advertisement

Advertisement

Advertisement