• Apr 08 2025

சிறைக் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை: அருள்ஜெயந்திரன் ஆதங்கம்..!

Sharmi / Apr 2nd 2025, 4:39 pm
image

"கைதிகளும் மனிதர்கள்" என்று எழுதி காட்சிப்படுத்தப்பட்டும் யாழ்.சிறைச்சாலையில் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை, என்று அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள்ஜெயந்திரன் தெரிவிப்பு

யாழ் ஊடக அமையத்தில் இன்று(02) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள்ஜெயந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் சிறைச்சாலையில் 800 சதுர அடியில 70 பேர்களை அடைக்கின்றார்கள். நான் இருதய சத்திரசிகிச்சை செய்த நோயாளி இவ்வாறு அங்கு நிலைமை உள்ளது.

ஆனால் புறோயிலர் கோழி வளர்ப்பு மாதிரிதான் சிறைச்சாலையில் உள்ளவர்களை நடத்துகின்றாங்கள். இது மனித உரிமை மீறல், இதனைப் பற்றி பேசுவதற்கு ஆட்கள் இல்லை.

சிறைச்சாலை சிற்றுண்டிசாலை அங்கு கடமை புரியும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தான் நடத்தப்படுகின்றது. நல்ல தரமான உணவாக எதுவும் கிடையாது. இதற்கு நிர்வாகமும் உடமை என்றார்.

மாபியா வைத்தியர்களாக  இப்போது யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.அர்ச்சுனா கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடக்கின்ற காலத்தில் கடைசியாக இருந்த மருத்துவரில் இவரும் ஒருவர் அவருக்கு சகல விடையமும் தெரியும். இன்று வரைக்கு அவர் வெளிகொணரவில்லை. 

அவர் சாதாரணமாக வைத்தியராகத் தான் வந்தவர். ஆனால் பல கோடி சொத்துகளுக்கு அதிபதி என்றார்.

சிறைக் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை: அருள்ஜெயந்திரன் ஆதங்கம். "கைதிகளும் மனிதர்கள்" என்று எழுதி காட்சிப்படுத்தப்பட்டும் யாழ்.சிறைச்சாலையில் கைதிகளை மனிதர்கள் போல் நடத்துகின்றார்கள் இல்லை, என்று அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள்ஜெயந்திரன் தெரிவிப்புயாழ் ஊடக அமையத்தில் இன்று(02) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள்ஜெயந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் சிறைச்சாலையில் 800 சதுர அடியில 70 பேர்களை அடைக்கின்றார்கள். நான் இருதய சத்திரசிகிச்சை செய்த நோயாளி இவ்வாறு அங்கு நிலைமை உள்ளது.ஆனால் புறோயிலர் கோழி வளர்ப்பு மாதிரிதான் சிறைச்சாலையில் உள்ளவர்களை நடத்துகின்றாங்கள். இது மனித உரிமை மீறல், இதனைப் பற்றி பேசுவதற்கு ஆட்கள் இல்லை.சிறைச்சாலை சிற்றுண்டிசாலை அங்கு கடமை புரியும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தான் நடத்தப்படுகின்றது. நல்ல தரமான உணவாக எதுவும் கிடையாது. இதற்கு நிர்வாகமும் உடமை என்றார்.மாபியா வைத்தியர்களாக  இப்போது யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.அர்ச்சுனா கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடக்கின்ற காலத்தில் கடைசியாக இருந்த மருத்துவரில் இவரும் ஒருவர் அவருக்கு சகல விடையமும் தெரியும். இன்று வரைக்கு அவர் வெளிகொணரவில்லை. அவர் சாதாரணமாக வைத்தியராகத் தான் வந்தவர். ஆனால் பல கோடி சொத்துகளுக்கு அதிபதி என்றார்.

Advertisement

Advertisement

Advertisement