• Nov 26 2024

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் - அரசு எடுத்த நடவடிக்கை..!

Chithra / Feb 27th 2024, 10:57 am
image

 

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் - அரசு எடுத்த நடவடிக்கை.  சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement