• Nov 28 2024

மேலாடையின்றி தோசை தயாரித்ததால் சிக்கல்; கொழும்பில் பிரபல உணவகம் மீது வழக்கு

Chithra / Aug 22nd 2024, 12:58 pm
image

 

கொழும்பிலுள்ள பிரதான உணவுக் கடையொன்றில் மேலாடையின்றி தோசை தயாரிக்கப்பட்டதால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . 

இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

“கமே கடை, தோசை கடை” உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படும் பல உணவுக் கடைகளுக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேனவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரித்தல், அசுத்தமான முறையில் உணவை சேமித்தல், பூச்சிகள் கொண்ட உணவு விற்பனை செய்தல், அசுத்தமான நிலையில் உபகரணங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்தல், 

கழிவுகள் வடிகாலில் செல்வதைத் தடுத்தல், குப்பைத் தொட்டிகளைத் திறந்து வைத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலாடையின்றி தோசை தயாரித்ததால் சிக்கல்; கொழும்பில் பிரபல உணவகம் மீது வழக்கு  கொழும்பிலுள்ள பிரதான உணவுக் கடையொன்றில் மேலாடையின்றி தோசை தயாரிக்கப்பட்டதால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.“கமே கடை, தோசை கடை” உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படும் பல உணவுக் கடைகளுக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேனவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரித்தல், அசுத்தமான முறையில் உணவை சேமித்தல், பூச்சிகள் கொண்ட உணவு விற்பனை செய்தல், அசுத்தமான நிலையில் உபகரணங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்தல், கழிவுகள் வடிகாலில் செல்வதைத் தடுத்தல், குப்பைத் தொட்டிகளைத் திறந்து வைத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement